மணல் கொள்ளையர்களை இராணுவத்தினர் சுற்றி வளைத்த போது உழவு இயந்திரத்தை கைவிட்டு தப்பி சென்றுள்ளனர்.  யாழ்ப்பாணம் தென்மராட்சி கெற்போலி பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றதுள்ளது. 

குறித்த பகுதியில் மணல் கொள்ளையர்கள், உழவு இயந்திரத்தில் வந்து மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். என இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் விரைந்திருந்தனர்.  

மணல் கொள்ளையர்களை சுற்றி வளைத்து இராணுவத்தினர் பிடிக்க முற்பட்ட போது கொள்ளையர்கள் உழவு இயந்திரத்தை அவ்விடத்தில் கைவிட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.  

சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரால் கொடிகாம பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் உழவு இயந்திரத்தை மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதுடன் , விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top