முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றினை செய்தி அறிக்கையிட முள்ளியவளை பகுதியில் இருந்து சென்ற ஊடகவியலாளர் மூன்றாம் கட்டை பகுதியில் உள்ள படையினரின் வீதி சோதனை நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

தான் ஊடகவியலாளர் மாவட்ட செயலகத்தின் அறிவித்தலுக்கு அமைய செய்தி சேகரிக் செல்வதாக படையினருக்கு தெரிவித்த போதும் அவர்கள் அனுமதியினை மறுத்துள்ளதுடன் அதிகாரியிடம் கேட்டுவிட்டு சொல்வதாக கூறினார்கள்.

குறித்த வீதி சோதனை நிலையத்தில் முள்ளியவளை பொலிசாரும் கடமையில் நின்றபோதும் படையினர்கள் என்ன சொல்கின்றார்களோ அதுதான் இங்கு என பொலிசார் தெரிவித்துள்ளர்கள். இதேவேளை அந்த வீதி ஊடாக அத்திய அவசிய சேவையில் ஈடுபடும் ஏனையவர்கள் தங்களை அடையாளப்படுத்தி சென்று வந்துள்ள நிலையில் ஊடகவியலாளருக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது .

சற்று நேரம் கழித்து அதிகாரியுடன் பேசிய அங்கு கடமையில் நின்ற படையினர் ஊடகவியலாளர் செல்வதற்கு அனுமதி இல்லை என கூறியதாக கடமையில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்து உதவிப்பணிப்பாளருக்கு நிலமையினை எடுத்துரைத்த ஊடாவியலாளர் அவர் இராணுவ அதிகாரிக்கு தெரியப்படுத்துவதாக கூறியுள்ளதை தொடர்ந்து 01 மணி நேரமாக காத்திருந்த ஊடகவியலாளர் பணி செய்யமுடியாத நிலையில் வீடு திரும்பியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையினை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் இணைந்து பிராந்திய சுகாதர சேவைகள் பணிமனையினருக்கு கொரோன நோயாளர்களுக்கான ஒருதொகுதி சுகாதார உபகரணங்கள் வழங்கிவைக்கப்படவுள்ள நிகழ்விற்கு சென்ற ஊடகவியலாளருக்கே இந்த நிலை ஏற்ட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊடகவியலாளர்கள் தங்களை அடையாளப்படுத்தி செய்தி சேகரிக்க சென்றாலும் சில பகுதிகளில் அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.  

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top