கடந்த 1948 ஆம் ஆண்டுக்கு முன்னர் ரோயல் பிரிட்டிஸ் இராணுவத்தில் பணியாற்றிய இலங்கை வீரர் எஸ். டபிள்யூ. குணபால தனது 102 ஆவது வயதில் காலமானார்.

ரோயல் பிரிட்டிஷ் இராணுவத்தில் 410 ஆவது இலக்கத்தின் கீழ் 2 ஆவது ரோயல் பீரங்கி படைப் பிரிவில் கடமையாற்றிய எஸ். டபிள்யூ. குணபால, அம்பலாங்கொட அஹுங்கலவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று உயிரிழந்தார். எஸ். டபிள்யூ. குணபால 20.01.1943 முதல் 06.02.1945 வரையான காலப் பகுதியில் ரோயல் பிரிட்டிஷ் இராணுவத்தில் கடமையாற்றியுள்ளார்.


1939-1945 காலப்பகுதியில் இரண்டாம் உலகப் போர் கால கட்டத்தில் எஸ். டபிள்யூ. குணபாலவும் அப்போதைய இராணுவத்தில் பணியாற்றியதால், பிரிட்டிஷ் இராணுவம் மறைந்த குணபாலாவுக்கு, அவரது சேவைக்காக பாராட்டுக்குரிய விருதுகள் மற்றும் பாராட்டுக்களை வழங்கி கௌரவித்துள்ளது.


இந்நிலையில் அவரது சடலம் அஹுங்கல்ல, தஹமதிஸ்ஸ மாவத்தையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஒக்டோபரில், அவர் தனது 102 ஆவது பிறந்த நாளை குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top