பொரளையில் 14 வயது மாணவி ஒருவர் காதலன் தொடர்பை நிறுத்தியதால் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து உயிரை மாய்க்க முயன்ற நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் சில தினங்களின் முன்னர் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

இணையவழி கற்கைக்காக பயன்படுத்தும் கைத் தொலைபேசியில் மாணவிக்கு, இளைஞன் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ள நிலையில், சில தினங்களின் முன்னர் அந்த இளைஞன் தொடர்பை துண்டித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து விரக்தி அடைந்த மாணவி அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து தற்கொலை செய்யும் நோக்கில் கீழே குதித்து நிலையில் படுகாயமடைந்ததை அடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top