நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் நாளை (திங்கட்கிழமை) நீக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்தோடு, குறித்த கட்டுபாடுகளுக்கு உட்பட்டே மக்கள் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.அலுவலகங்களில் சேவைக்காக குறைந்தபட்ச ஊழியர்களையே வரவழைக்க முடியும்.

வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடியவர்களை அவ்வாறே சேவையில் ஈடுபடுத்த வேண்டும்.

பொது போக்குவரத்தில் பயணிகளை இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அழைத்துச் செல்ல வேண்டும்.

ஒவ்வொரு நபரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாகும்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும்.

மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படமாட்டாது.

ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே மாகாணங்களுக்கு இடையே பயணிக்க முடியும்.

உல்லாசப் பயணங்கள் மற்றும் யாத்திரை செல்ல அனுமதி இல்லை.

பொது இடங்களில் கூட்டமாக இருக்கக்கூடாது.

இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாடுகள் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் அமுலில் இருக்கும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.


அத்தோடு, தற்போது அமுலில் இருப்பதைப்போன்றே பொதுநிகழ்வுகள் உள்ளிட்டவற்றிற்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top