இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


உயிரிழந்த டிப்பர் சாரதிக்கும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் இடையில் சிறிது நாட்களுக்கு முன்னர் தகராறு காணப்பட்டது.


இந்நிலையில் இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாக பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள், அவ்வழியாக மணல் ஏற்றிச் சென்ற குறித்த டிப்பர் சாரதியின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்ற போது இராஜாங்க அமைச்சர் அவரது வீட்டில் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் கருணாவின் கட்சியின் முக்கியஸ்தராக செயற்பட்ட கமலதாஸ் தனது முகநுால் பக்கத்தில், ஆட்டோவில் வந்தவர் குடிவெறியோ, இல்லையோ...கொலைவெறியுடன் வந்தார் என்று எப்படி முடிவு செய்தார்கள்? பொறுப்புணர்வு வேண்டாமா?? ஏற்கனவே பொலீஸ்மீது மக்கள் காண்ட்டாக இருக்கிறாங்க... ஏறாவூரில் முட்டுக்காலில் நிறுத்தியவர்களுக்கு உடனடி வேலைநீக்க உத்தரவு... இப்ப மாஸ்டர்ர பாதுகாவலருக்கும் உடனடி இடைநிறுத்தம் வரும்.... அதிகாரம் இருக்குது என்று ஆட்டம் போடாதீங்க மக்காள். மன்னர் கடும் கோபக்காரர். நாட்டின் இமேஜைக் கெடுக்காதீங்க....


மாஸ்டரோட ரிப்பர்காரன் நாலுநாளைக்கு முதலும் தகராறாம். இண்டைக்கும் சண்டை பிடிக்கத்தான் போன போல... மாஃபியாவோட மோதுனா கதி உணர்வாளருக்கு நடந்தாப்போல அல்லது இப்படித்தான் எண்டு பாடம் எடுக்காரோ...?என பதிவிட்டுள்ளார்.


பொலிஸ் கான்ஸ்டபிள், அவ்வழியாக மணல் ஏற்றிச் சென்ற குறித்த டிப்பர் சாரதியுடன் முறுகல் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறுவாராயின் பொலிஸ் கான்ஸ்டபிள் மண் வியாபாரம் செய்யும் ஒருவரா? என வினா எழுப்பும் சமூக ஆர்வலர்கள், இந்த துப்பாக்கிச் சூட்டில் மண் வியாபாரம் மறைந்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர் உண்மை துலங்குமா என மேலும் வினா எழுப்புகின்றனர்.


மண் வியாபாரம் தற்போது மட்டக்களப்பில் கொடி கட்டிப் பறக்கிறது, அரசு உரிய விசாரணை நடத்தினால் பல குழப்பங்களிற்கு பதில் கிடைக்கும் என மேலும் தெரிவித்துள்ளனர். 


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top