தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் பாகம் என சந்தேகிக்கப்படும் சுமார் 250 கிலோ எடையுள்ள இரும்பு மிதவை ஒன்று நேற்று மாலை மொரகல்ல கரையோரத்தில் ஒதுங்கியுள்ளது.

மீனவர்கள் கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் இந்த இரும்பு மிதவை கடலில் அடித்து வரப்படுவதை அவதானித்தனர்.

இதனையடுத்து குறித்த மிதவை அளுத்கம மீன்வள ஆய்வாளரின் மேற்பார்வையில், அப்பகுதியில் வசிப்பவர்களின் உதவியுடன், கயிறு கட்டி கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது.

கரைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 7 அடி உயரம், கிட்டத்தட்ட 250 கிலோ எடையுள்ள இரும்பு மிதவையை நாரா நிறுவனத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top