எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் சம்பவம் காரணமாக இலங்கை மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் தமது மன்னிப்பையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதாக கப்பல் உரிமையாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.


சிங்கப்பூரின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எக்ஸ்பிரஸ் பீடர் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஷூமெல் யோஸ்கொவிடிஸ் இதனை தெரிவித்துள்ளார்.


மேலும் கருத்து தெரிவித்த அவர், கப்பலில் இருந்து இதுவரை எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என தெரிவித்தார்.கப்பலுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பீடு செய்வது சிரமமாகும் எனவும் கப்பல் காப்புறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


அதன் காரணமாக எமது நிறுவனத்திற்கு ஏற்படும் நிதி இழப்பு மிகவும் குறைவு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top