கர்ப்பிணிப் பெண் ஒருவர் வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் வீழ்ந்த நிலையில் கிணற்றுக்குள் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். இந்த நிலையில் குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று (15) றம்புக்கன பத்தாம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.மேற்படி பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய பெண் வீட்டில் காணப்படாமையையடுத்து அவரது உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர். அதன்போது தமது வீட்டுத் தோட்டத்துக்கு கீழே உள்ள கிணற்றில் அவர் வீழ்ந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

​இதனையடுத்து அவர் அயலவர்களின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டபோது அவருக்கு கிணற்றுக்குள் குழந்தை பிரசவமானது தெரிய வந்துள்ளது

இதனையடுத்து கிணற்றை துப்பரவு செய்து தேடியபோது சிசு மரணித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் 

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top