இந்தியாவில் மகள் ஆன்லைனில் கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக தந்தை குடைபிடித்து நின்ற காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.கொரோனாவின் 2வது அலை இந்தியாவில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, தற்போது நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தாலும், மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைனில் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆன்லைனில் பாடங்களை கவனித்துக் கொண்டிருந்தார்.அவர்கள் வசிப்பது கிராமப்புறம் என்பதால், சாலைக்கு வந்து கல்வி கற்பது வழக்கம்.

நேற்று பயங்கர மழை பெய்தாலும், பாடத்தை கவனிக்க வேண்டும் என்பதற்காக கொட்டும் மழையில் அமர்ந்திருக்கிறார்.அவருக்கு துணையாக தந்தை மகளுக்காக குடை பிடித்து நிற்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

Mahesh Puchchappady என்ற பத்திரிக்கையாளர் எடுத்த இந்த புகைப்படம் வைரலாக, கிராமப்புறங்களில் இணைய சேவை சீர் செய்யப்படும் என BSNL நிறுவனம் அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top