அமைச்சரால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும் என்றால், ஜனாதிபதியாலும் பிரதமராலும் ஏன் விடுவிக்க முடியாதென, ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான ஆனந்தி சசிதரன் கேள்வி எழுப்பினார்.


யாழ்ப்பாணத்தில்,நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், நீண்ட காலமாக சிறைகளில் இருந்த அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டமையானது, மகிழ்ச்சிக்குரிய விடயமாகுமென்றார்.


இந்நிலையில், மிகுதியாக உள்ள அரசியல் கைதிகளும் எந்தவித பாரபட்சமுமின்றி விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும், அவர் வலியுறுத்தினார். அத்துடன், ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு உதவிய குற்றச்சாட்டில், சிங்கள, முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த பலர், அரசியல் கைதிகளாக இன்னும் சிறையில் உள்ளனரென்றும், அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டினார்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top