கொழும்பிலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் தீ விபத்துக்கு உள்ளான எம்.எஸ்.சி மெசினா கொள்கலன் கப்பல் இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறியதாக கடற்படை அறிவித்துள்ளது.


சிங்கப்பூருக்கு சொந்தமான ரீ.சீ விகர் என்ற இயந்திரத்தின் உதவியுடன் குறித்த கப்பல் இழுத்து செல்லப்பட்டதாக கடற்படை அறிவித்துள்ளது.


தென் கடற்பரப்பின் மகா இராவணா வெளிச்சவீட்டிலிருந்து கிழக்கே 480 கடல் மைல் தூரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது குறித்த கப்பலில் தீ பரவியது.


குறித்த கப்பலில் ஏற்பட்ட தீ நேற்று காலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.


மேலும் 28 பணியாளர்களுடன் சென்ற கப்பலில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top