கோவிட் தொற்றாளர் ஒருவருக்கு புதிய வகை வைரஸ் திரிபுகளின் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் அவரது வாழ்நாள் முழுவதும் நீடிக்கலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


தொற்றுக்குள்ளாகும் நபர்கள் சிலர் குறுகிய காலத்துக்குள் குணமடையாமையின் காரணமாக புதிய வகை வைரஸ் திரிபுகளுக்கு எதிராக போராடுவதற்கு வைத்திய நிபுணர்கள் வெவ்வேறு சிகிச்சை முறைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.


கோவிட் நிமோனியாவின் கடுமையான பாதிப்புக்களில் இருந்து சிலர் மீண்டு வந்தாலும் புதிய திரிபுகள் நீண்டகால சுகாதார பாதிப்புக்களை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுகின்றது.


சிலர் குறுகிய காலத்துக்குள் மீண்டும் தொற்றுக்கு உள்ளாகக் கூடிய நிலை காணப்படுகின்றது. பயணக் கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ள காலப்பகுதிகளிலும் வீதிகளில் மக்களின் நடமாட்டம் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையினால் வைரஸ் பரவல் தொடரும் நிலையே காணப்படுகின்றது.


புதிய வைரஸ் திரிபுகளின் தீவிரத்தன்மை தொடர்பில் தினசரி அதிகரிக்கும் கோவிட் மரணங்களின் மூலம் மக்கள் தற்போது தெளிவு பெற முடியும். இருப்பினும் கட்டுபாடுகளை தளர்த்தி நடைமுறைப்படுத்துவதன் மூலம் பொது மக்களின் கடின உழைப்பு மற்றும் தியாகங்கள் வீணாகிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top