தமிழகத்தின் திருவண்ணாமலையில் தந்தை ஒருவர் வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்திக்கொண்டு தனது மகளை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற நிலையில் , தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அம்மிக்கல்லால் மகள் தந்தையை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த நெடுங்காம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (40) இவர் தெருக்கூத்து நாடக கலைஞர், முருகன் மனைவி மஞ்சு (32) மற்றும் மகள்கள் இரண்டு மகள்கள் மூத்த மகள் ஷர்மிளா வயது 19, முருகனுக்கு குடிபழக்கம் அடிமையானவர். இந்நிலையில், மனைவி மஞ்சு மற்றும் இரண்டாவது மகள் ஆகிய இருவரும் திருவண்ணாமலைக்கு சென்றிருந்ததாக சொல்லப்படுகிறது.

சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்திக்கொண்டு குடிபோதையில் விட்டிற்கு வந்த முருகன் தனியாக இருந்த தனது மூத்த மகளிடம் தகாத முறையி நடந்துகொள்ள முயன்றதாகவும் அப்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள பத்மா அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து பலமாக தாக்கியதில், மயங்கி விழுந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்து வந்த கீழ்பென்னாத்தூர் பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த முருகனின் மனைவி மஞ்சு மற்றும் மகள் ஷர்மிளா கீழ்பெண்ணாத்தூர் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top