தாதியர்கள் இன்றைய தினம் இரண்டாவது நாளாகவும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய ரீதியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.


தாதியர் சங்கம் உள்ளிட்ட சில சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


நேற்றைய தினம் உரிய பதில் எதனையும் அதிகாரிகள் வழங்கத் தவறியதனால் இன்றும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க நேரிடுவதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் முரத்தெட்டுவ ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.


அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தாதியர் சங்கத்தின் அழைப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.


இதேவேளை, தாதியர்களின் போராட்டத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் செனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு தடவை வழங்கப்படும் பதவி உயர்வு வழங்காமை, வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும், கோவிட் பெருந்தொற்று நிலைமைகளில் தாதியர் எதிர்நோக்கி வரும் சிரமங்களுக்கு தீர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top