தமிழ், தெலுங்கு திரையுலகில் பெரும் பிரளயத்தை கிளப்பியவர் நடிகை ஸ்ரீரெட்டி. படவாய்ப்பு தருவதாக கூறி தன்னை உல்லாசத்திற்கு பயன்படுத்திவிட்டுக் கழட்டிவிட்டவர்கள் என்று விஷால், ஏ.ஆர். முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என பெரிய லிஸ்ட்டையே வெளியிட்டவர்.


ஸ்ரீரெட்டி தற்போது காண்டம் பயன்படுத்தியதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமுக வலைத்தளத்தில் எப்போதும் அக்டிவாக இருக்கும் ஸ்ரீரெட்டி அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம். இந்த சூழலில் ரசிகர் ஒருவர் இப்படி பல பேருடன் இருந்தேன் என்று சொல்கிறீர்களே, உங்களுக்கு இன்னும் எய்ட்ஸ் நோய் தாக்கவில்லையா? என கேள்வி எழுப்பினர். மேலும் நடிகையாக வேண்டும் என்பதற்காக கோல் கேர்ளாக பகுதிநேர வேலையை செய்கிறீர்களே என நகைத்தனர்.

 அதற்கு பதிலளித்த ஸ்ரீரெட்டி, “என் மீதான உங்களின் அக்கறைக்கு நன்றி. காண்டம் பற்றி உங்களுக்கு தெரியாது என நினைக்கிறேன். அப்படியான தொடர்பில் இருக்கும்போது என்னை எப்படி பாதுகாப்பது என்ற அறிவு எனக்கு இருக்கிறது. கருத்து தெரிவித்து பாவத்தை பெறாதீர்கள். உங்களின் விமர்சனத்தை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். மரணம் அடைய எய்ட்ஸ் தேவையில்லை, காய்ச்சலால் கூட நீங்கள் மரணமடையலாம்” என பதிலடி கொடுத்தார்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top