மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை அந்நாட்டு இராணுவம் கைப்பற்றியுள்ளதற்கு பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.



மியான்மர் நாட்டில் ஆங் சான் சூ கி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மியான்மர் இராணுவத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


அந்த வரிசையில் பிரித்தானியாவும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.


இதுகுறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் ட்விட்டரில் பதிவிட்டதாவது,மியான்மரில் ஆங் சான் சூ கி உள்ளிட்ட பொதுமக்களை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை நான் கண்டிக்கிறேன்.


I condemn the coup and unlawful imprisonment of civilians, including Aung San Suu Kyi, in Myanmar. The vote of the people must be respected and civilian leaders released.

மக்களின் வாக்கு மதிக்கப்பட வேண்டும் மற்றும் மக்கள் தலைவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top