நேற்று நள்ளிரவு பிரான்ஸ் பிரதமர் எல்லைக் கட்டுப்பாடுகள் குறித்த சில விதிமுறைகளை அறிவித்துள்ளார்.


அதன்படி, பிரித்தானியா உட்பட ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் Schengen மண்டலத்துக்கு வெளியே உள்ள மக்கள் பிரான்சுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.


சில குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே அவர்கள் பிரான்சுக்குள் நுழையலாம். அவையாவன:


குடும்பம் தொடர்பான காரணங்கள்

குடும்பத்தினரின் இறப்பு மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்வாய்ப்பட்டிருப்போரைக் காண விவாகரத்தான பெற்றோர் குழந்தையை சந்திக்க சட்ட ரீதியான விடயங்களுக்காக படிப்பு காரணங்களுக்காக


உடல் நலம் தொடர்பான காரணங்கள்

உடல் நலமில்லாத ஒருவரும், அவருடன் அவரை கவனித்துக்கொள்ளும் ஒருவரும் மருத்துவ காரணங்களுக்காக பிரான்சுக்குள் வரலாம்


பணி தொடர்பான காரணங்கள்

ஆள் நேரில் வந்தால் மட்டுமே செய்யமுடியும் என்ற கட்டாயம் உள்ள அத்தியாவசிய பணிக்காக கொரோனா தொடர்பாக பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள் தூதரகம் தொடர்பான பணி மற்றும் உயர் மட்ட விளையாட்டு துறையில் உள்ளவர்கள் இவர்கள் அனைவருமே தங்கள் வருகை அவசியம் என்பதைக் காட்டும் உரிய துறைசார்ந்த ஆவணங்களைக் கொண்டுவரவேண்டியது அவசியம் என பிரான்ஸ் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top