யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவின் போது சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இருவர் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.


இதன்படி 2013ஆம் ஆண்டு வாழ்வகத்தில் இணைந்துகொண்ட சபேசன் கட்சனி மற்றும், அதே ஆண்டில் வாழ்வகத்தில் இணைந்துகொண்ட விஜயகுமார் விஜயலாதன் ஆகியோரே நேற்று இந்த பட்டத்தினைப் பெற்றுள்ளனர்.



சபேசன் கட்சனி அரசறிவியல் துறையிலும் விஜயகுமார் விஜயலாதன் சமூகவியல் துறையிலும் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.


சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் என்னும் முகவரியில் இயங்கி வரும் விழிப்புல வலுவிழந்தோர் வாழ்வகமானது கண் பார்வையற்ற, பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகளின் கல்வி வரலாற்றில் மிகவும் காத்திரமான பணியாற்றி வரும் ஒரு தொண்டு ஸ்தாபனமென்பது சுட்டிக்காட்டத்தக்கது.


குறித்த வாழ்வக மாணவர்கள் கல்வியில் சிறந்து உயர் பெறுபேறுகள் பெற்று சாதனை புரிந்து வருகின்ற நிலையில் சாதனை படைத்த இரு மாணவர்களும் பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.






0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top