இலங்கையில் கடந்த 05 வருடக் காலப்பகுதியில் 23204 பெண்கள் காணாமல் போயுள்ளமை பற்றிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாடுகள் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் கொழும்பு டாம் வீதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்ட தலையற்ற உடல் சார்ந்த விசாரணையின் ஆரம்பத்தில் பொலிஸார், உடலை அடையாளம் காண்பதற்காக பொதுமக்களை நாடியிருந்தனர்.

இதன்போது சுமார் 200ற்கும் அதிகமான அழைப்புக்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளில் இருந்தும் பொலிஸாருக்கு கிடைத்திருந்தன.இந்த நிலையில் பொலிஸாரின் பதிவுகளில் குறிப்பாக 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 23204 பெண்கள் காணாமல் போயுள்ளமை பற்றி முறைப்பாடுகள் குவிந்திருக்கின்றன.

அதற்கமைய 2020ஆம் ஆண்டில் 3716 முறைப்பாடுகள் பதிவாகியிருக்கின்றன.அதன்படி 2019ஆம் ஆண்டில் 3425 முறைப்பாடுகளும், 2018ஆம் ஆண்டில் 3325 முறைப்பாடுகளும் பொலிஸாருக்கு கிடைத்திருக்கின்றன.

2017ஆம் ஆண்டில் 3617 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், 2016ஆம் ஆண்டில் 4420 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.2015ஆம் ஆண்டிலேயே அதிக முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அவை 4701ஆக காணப்படுகின்றன.

இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளில் சிலர் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் பொலிஸாரின் பதிவுப்புத்தகத்தில் அது குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top