கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் மளமளவென குறைந்துள்ளது.தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும், பாதுகாப்பானதாக கருதப்படும் தங்கத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக, தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருவதனால், கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது.

இந்த வாரத்தை கிடுகிடுவென உயர்வுடன் தொடங்கிய தங்கம் விலை, இன்று சரிந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.33,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் ரூ.40 சரிந்து ரூ.4,180க்கு விற்பனையாகிறது.

 

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top