இந்தியாவில் திருமணமாகாத 31 வயது பெண் பரபரப்பான சாலையில் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாப் மாநிலத்தில் பட்டால் கிராமத்தை சேர்ந்தவர் பஜன் சிங். இவர் மகள் மன்ப்ரீத் கவுர் (31)

இவர் கல்லூரியில் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை 7 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு கவுர் கிளம்பினார்.

சிறிது நேரத்தில் சிங்குக்கு ஒரு போன் வந்தது, அதில் பேசிய நபர்கள் உங்கள் மகள் தீக்குளித்து சாலையில் உயிரிழந்துவிட்டார் என கூற சிங் அதிர்ச்சியில் உறைந்து போய் கதறி துடித்தார்.

பொலிசார் கூறுகையில், பரபரப்பான சாலையில் கவுர் உயிரிழந்துள்ளார். தன் மீது பெட்ரோலை ஊற்றி கொண்டு கவுர் தீக்குளித்துள்ளார் என்றே கருதுகிறோம்.

அந்த சமயத்தில் அவரை யாருமே காப்பாற்ற முயலவில்லை. எப்படியிருந்தாலும் இது கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை நடக்கிறது என கூறியுள்ளனர்.

கவுர் தந்தை சிங் கூறுகையில், என் மகளை யாருமே காப்பாற்ற முன் வரவில்லை.

இவ்வளவு பெரிய முடிவை அவளா எடுத்தால் என்பதை என்னால் நம்பமுடியவில்லை.

கவுருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் எப்படி இறந்தாள் என்றே எனக்கு இன்னும் சரியாக தெரியவில்லை என சோகத்துடன் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top