நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதுடன், பெண்ணின் தலையை துண்டிக்கும் அளவுக்கு அது தீவிரமடைந்துள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மகளிர்தின நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் ருவான் விஜேவர்தன மேலும் கூறியுள்ளதாவது, “அனைத்து பெண்களுக்கும் முதலில் மகளிர்தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

 இலங்கையை பொறுத்தமட்டில் முதல் பெண் பிரதமரை உருவாக்கியமை தொடர்பில் பெருமைக் கொள்வதுடன், பெண் ஜனாதிபதியொருவரும் பதவி வகித்துள்ளார் என்று பெருமிதம் கொள்ள முடியும். இவ்வாறு ஆரம்பத்தில் பெண்களுக்கு பல முதல்நிலை பொறுப்புகளை வழங்கிய எமது நாட்டில், இன்று பெண்களின் நிலைமை எவ்வாறு இருக்கின்றது.

பெண்கள் தங்களது குடும்பத்திற்கு மட்டுமன்றின் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். பணிப்பெண்களான வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள், தேசிய வருமானத்திற்கு பெரும் உந்துசக்தியாக செயற்பட்டு வருகின்றார்கள்.

எனினும் கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் அவர்களது நிலைமை பெரும் நெருக்கடிகளுக்குள்ளாகியுள்ளது. இதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு மத்தியிலே அவர்கள் மேலும் சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அதற்கமைய பெண் பிரதி பொலிஸ்மா அதிபரின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நபர்களிருக்கும் இந்த நாட்டில், தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் பெண் தலை துண்டிக்கப்பட்டு கொலைச் செய்யப்படும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. வீட்டை விட்டு வெளியேறும் பெண்களின் கழுத்திலிருக்கும் தங்கச் சங்கிலிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை.

இதனை மாற்றி அமைக்க வேண்டும். இதன் ஆரம்ப கட்டமாக எமது கட்சிலுள்ள பிரதான வெற்றிடங்களில் பெண்கள் நியமிக்கப்பட வேண்டும்.

இதற்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒத்துழைப்பு வழங்குவார் என்று எண்ணுகின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top