2024ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை மீண்டும் கொண்டுவரும் நோக்கில் தமது செயற்பாடுகள் அமைந்துள்ளதாக அக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு நேற்று கருத்த தெரிவித்த அவர்,

கட்சியில் பாரிய மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்சியின் புதிய நிர்வாக குழு நேரடியாக மக்கள் மத்தியில் சென்று கலந்துரையாடுகிறது.பிரதி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ருவான் விஜேவர்தனவின் செயற்பாடுகளும் திருப்திகரமாக அமைந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் எவ்வித ‘டீல்’களையும் தாம் மேற்கொள்ளவில்லை. தாக்குதல் இடம்பெற்றிருந்த சந்தர்ப்பத்தில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டில் இருந்தார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு உரியவர்களை அழைத்து எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களால் தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய முக்கிய சூத்திரதாரிகளை எம்மால் கைதுசெய்ய முடிந்தது. ஐக்கிய தேசியக் கட்சியை 2024ஆம் ஆண்டு ஆட்சிக்கு கொண்டுவருவதே எமது நோக்கமாகும். கட்சியில் பாரிய மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய நிர்வாக குழு மக்களிடம் நேரடியாக செல்கிறது. கட்சி சந்தித்த வீழ்ச்சிக்கு பொறுப்பேற்றுக்கொள்கிறேன். கடந்த தேர்தலில் வாக்களித்த ஐ.தே.க.வினரைவிட வீட்டில் இருந்தவர்களே அதிகமாகும்.

2024இல் ஐ.தே.கவின் ஆட்சி மலர்வதற்காக தேவை ஏற்படின் சஜித் உடனும் பேச தயார். நாம் அவர்களை நீக்கவில்லை. அவர்கள்தான் விலகிச் சென்றனர். அரசியலில் நிரந்தர நண்பனும் நிரந்தர எதிரியும் என எவரும் இல்லை என்றார்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top