குருணாகல், நாரம்மல – பஹமுனே பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபரொருவர் கொல்லப்பட்டுள்ளார்.பஹமுனே – கூரிகொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டவராவார்.

காரொன்றில் வந்த சந்தேகநபர்,உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த மேற்படி நபரை மோதி விபத்துக்குள்ளாக்கியதன் பின்னர் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தின் பின்னர் கொலையாளி நாரம்மல காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அதன்போது, குறித்த நபர் தன்னுடைய மனைவியின் தகாத படங்களை தனது கைப்பேசிக்கு அனுப்பி தன்னை அசௌகரியத்துக்கு உள்ளாக்கியதாக சந்தேகநபர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக காவலதுறையினர் தெரிவித்துள்ளனர்.

 

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top