இன்னும் 3 நாளில் சர்வதேச பெண்கள் தினம் வரும் நிலையில் ஒரு பெண் தன் மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்யும் நிலை இருக்கிறதே?சிலர் இதற்கு பொருளாதாரநிலை காரணம் என்பர். இன்னும் சிலர் இதற்கு மன அழுத்தம் காரணம் என்பர்.
அடுத்த பெண் சாகும்போதும் இதையே இவர்கள் கூறிக்கொண்டு இருக்கப்போகிறார்கள்.ஆனால் இதனை தீர்க்க வேண்டிய அரசியல்வாதிகளோ அடுத்த முதலமைச்சர் யார் என்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.
வாழ்க்கையில் ஆயிரம் நெருக்கடிகள்; இருந்தாலும் நாளை எல்லாம் சரியாகிவிடும் என்ற ஒற்றை நம்பிக்கையே எல்லோரையும் தொடர்ந்து வாழ வைக்கிறது.
அந்த நம்பிக்கை அற்றுப்போகும்போது தற்கொலை எண்ணங்கள் தோன்றுகின்றன என பாலன் சந்திரன் என்பவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment