அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் சிறை காவலர் ஒருவர் சிறைச்சாலை திணைக்களத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.



சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துசார உபுல்தெனிய இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறினார்.


நேற்று (08) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா, அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள ரஞ்ஜன் ராமநாயக்கவை சந்தித்துள்ளார்.


இதன்போது இருவரும் இணைந்து செல்பி புகைப்படம் எடுத்துள்ளனர்.


அதனை ஹர்சன ராஜகருணா தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார்.


எனவே, சிறைச்சாலைக்குள் இவ்வாறு செல்பி எடுக்க அனுமதித்ததற்காகவே குறித்த சிறைக்காவலர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துசார உபுல்தெனிய கூறினார்.


நேற்று ரஞ்சனை சந்தித்த ஹர்ஸன இவ்வாறு தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார்.


´ரஞ்ஜன் ராமநாயக்கவை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சந்தித்தேன். அதன்போது அவரின் தற்போதைய நிலையை அறிந்துக்கொள்ள முடிந்தது.´ என பதிவிட்டிருந்தார்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top