மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் விழுந்த நிலையில், இரண்டரை வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் தேற்றாத்தீவு பாலமுருகன் வீதியைச் சேர்ந்த உதயராஜ் ஹம்சவர்த்தினி எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று வீட்டில் வழமை போல் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தனது விளையாட்டுப்பொருள் கிணற்றில் விழ்ந்ததனைகண்டு அதனை தான் எடுக்க முற்பட்டபோது தவறுதலாக கிணற்றில் விழ்ந்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தகப்பனார் கிணற்றிலிருந்து மீட்ட சிறுமியை களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதித்த போதும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top