கொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் DNA பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.இதனைத் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த சடலம் குருவிட்டை, தெப்பனாவ பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணுடையதென DNA பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சடலம் சாட்சியங்களின் அடிப்படையில் யாருடைய எனக் கண்டறிந்த போதிலும் சடலத்தின் தலை துண்டிக்கப்பட்டிருந்தமையினால், மீட்கப்பட்ட அடையாளத்தை முழுமையாக உறுதிப்படுத்துவதற்காக மரபணு பரிசோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய, உயிரிழந்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரனின் மரபணு மாதிரிகள் பெற்றப்பட்டு பரிசோதனைகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டன.

 

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top