ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் 12000 படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அதனபடி நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களினதும் பாதுகாப்பிற்காக 12,000 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

வெளியிடப்பட்டுள்ள சிறப்பு சுற்றறிக்கையின் கீழ் இந்த சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொலிஸ் மற்றும் அதிரடிப்படையைச் சேர்ந்த மொத்தம் 9,365 அதிகாரிகள் கடமைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் மேலும் 2,522 முப்படை வீரர்களும் பாதுகாப்பு வழங்க ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள்.

மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட நீர்கொழும்பு, சிலாபம், மற்றும் மட்டக்களப்பைச் சுற்றியுள்ள தேவாலயங்களில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top