கொழும்பு – மவுண்ட் லவனியா பொலிஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துவிட்டதாக பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவித்துள்ளார்.குறித்த நபர் இம்மாதம் 18 ஆம் திகதி கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவரை மவுண்ட் லவனியா பொலிஸ் அதிகாரிகள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டதாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.எனினும் சம்பவத்தில் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இது தொடர்பான அனைத்து தகவல்களும் வெளிப்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் பல சந்தர்ப்பங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.மேலும் இறந்தவர் போதைக்கு அடிமையானவர் என்பது மருத்துவ பரிசோதனை அறிக்கைகளிலும் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஆனால் தனது கணவனை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும், அவரை 7 அல்லது 8 பேர் சேர்ந்து தலையில் கடுமையாக தாக்கியதாகவும் உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.முன்னதாக போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் சாரதியை நடு வீதியில் வைத்து கடுமையாக தாக்கி ஏறி குதித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த அதிகாரி பதவியிலிருந்து இடைநீக்கப்பட்டதுடன், தற்போது விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் அதிர்வுகள் அடங்குவதற்குள் இலங்கையில் பொலிஸாரின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top