மட்டு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் கிழக்குப்பல்கலைக்கழகத்திற்கு தனது இடத்தை வழங்கி விட்டு சித்தாண்டி மண்ணில் குடியேறி 40 வருடங்களுக்கு பின் தனது தரத்தை உறுதி செய்துள்ளது.

முதன் முதலாக உயிரியல் விஞ்ஞானத்துறையில் கிருபைரெத்தினம் ஜெயந்தினி எனும் மாணவி சித்தி அடைந்து மாவட்ட மட்டத்தில் 6ஆம் நிலையைப்பெற்றுள்ளார். இவ்வரலாற்றுச்சாதனை நிகழ்வதற்கு உதவிய நேர்பமனப்பாங்கான உயர்ந்த உள்ளங்களுக்கு என்றும் இறையாசி கிடைக்கட்டும்.

எதிர்காலத்திலும் இவ்வாறான கூட்டு முயற்சியினால் எமது வித்தியாலயத்ததை கட்டி எழுப்ப அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். கடந்தவருடம் சகல துறைகளிலுமாக 14 மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றார்கள் இவ்வருடம் 25 மாணவர்கள் குறித்த பாடத்துறைகளுக்கேற்ற வெட்டுப்புள்ளியைப்பெற்று பல்கலைக்கழகம் செல்லவுள்ளார்கள் என்பதும் வரலாற்றுச்சாதனை ஆகும் என குறித்த பாடசாலையின் பழைய மாணவனான அதிபர் - திரு.துரைசாமி முரளிதரன் பதிவிட்டுள்ளார் .


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top