யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்றுமுன்தினம் யாழ் மாநகரைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு உடனடியாக அன்டிஜன் பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று இல்லை என அறியப்பட்டுள்ளது. எனினும் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன.

இதனையடுத்து முதியவர் அன்றைய தினமே 7ஆம் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து 9ஆம் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முற்பகல் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் சடலம் நேற்று நண்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும் நேற்று மாலை வெளியாகிய பிசிஆர் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக முதியவரின் உடலை சுகாதார முறைப்படி தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப் பணிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top