இன்று அதிகாலை ஹட்டன் பகுதியில் 1990 சுவசெரிய அம்புலனஸ் சாரதி மற்றும் அவரது உதவியாளர் மீதும் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக திம்புல பத்தன காவல் துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திம்புல பத்தன, குடாகம பகுதியில் கட்டுமானப் பணி ஒன்றில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் பல்கனியிலிருந்து தரையில் விழுந்துள்ளதாக 1990 அம்புலன்ஸ் சேவைக்கு இன்று அதிகாலை 2.00 மணியளவில் தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது.

இதனையடுத்து அம்புலன்ஸ் வண்டி சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளது. அங்கு தரையில் விழுந்ததாகக் கூறிய ஊழியருக்கு எவ்வித காயங்களும் ஏற்படாததால் அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என அம்புலன்ஸின் சாரதியும் அதன் உதவியாளரும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் மதுபோதையில் இருந்த ஒரு குழுவினர் அம்புலன்ஸ் சாரதியையும் அதன் பணியாளரையும் தாக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து சந்தேக நபர்களைக் கைது செய்ததுடன்  கைதான சந்தேக நபர்கள் இருவரையும்  ஹற்றன் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top