கொரோனா வைரஸ் குறித்த எந்த விடயத்தையும் ஊடகங்களிற்கு தெரிவிப்பதற்கு முன்னர் தன்னிடம் தெரிவிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரச அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோன வைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் அது தொடர்பான விடயங்களை தன்னிடம் நேரடியாக தெரிவிப்பது அவசியம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களிற்கு தெரிவித்து மக்களை அச்சமூட்டுவதற்கு பதில் தன்னிடம் கொரோனா நிலவரம் தொடர்பான விடயங்களை தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் மக்களின் நலனிற்காக எந்த முடிவையும் எடுக்க தயங்கமாட்டேன் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்று வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என சுகாதார தரப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top