கிழக்கு மாகாண தொல்பொருள் திணைக்களத்தின் அலுவலகமான அம்பாறையில் இருந்த அனுராதா பிரியதர்சினி எனும் பெண்மணி கொரோனா தொற்றினால் அம்பாறை கொரோனா விசேட சிகிச்சை பிரிவில் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

இவரை பற்றி அவரது சக உத்தியோகத்தர் புகழாரம் சூட்டுகையில்,வடகிழக்கில் தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் தலையீடு பிரச்சினை மத்தியில் தான் கிழக்கு தொல்பொருள் திணைக்களத்தில் கடமையாற்ற விரும்பி தாமே இந்த பொறுப்பினை ஏற்று தமிழ் முஸ்லிம் பகுதியில் தொல்பொருள் திணைக்களம் பகுதியாக பிரகடனம் செய்வதில் முன்னின்று அர்ப்பணிப்புடன் கடமையாற்றி அவர்களது இனத்திற்கு பற்றுடன் செயலாற்றியதாக கூறியுள்ளார்கள்.எது எப்படி இருப்பினும் மரணித்தவரை பற்றி நாம் அவதூறாக கூற முற்படவில்லை ஆழ்ந்த இரங்கல்களும் ஆத்மசாந்தியடைய பிரார்த்திப்போம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top