எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த கொடுப்பனவை வழங்க வேண்டிய நபர்களின் பெயர் பட்டியலை வழங்குமாறு மீன்பிடி திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க கூறியுள்ளார்.

இதனிடையே எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக அன்றாட வாழ்வாதாரத்தை இழந்துள்ள மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று முற்பகல் உத்தரவிட்டுள்ளார்.

கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக கடலில் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்பை குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இன்று காலை உஸ்வெட்டகொய்யாவ கடற்பரப்பில் ஆய்வைமேற்கொண்ட போதே பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top