இலங்கையின் தற்போதைய கொரோனா தொற்று நிலைமையைக் கருத்திற் கொண்டு, முழு நாட்டையும் முடக்குவது குறித்து அவசரமாக அவதானம் செலுத்த வேண்டும் என, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறைந்த பட்சம் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பிலேனும் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளோரில் பெரும்பாலானோர், உரிய சிகிச்சை நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படும் வரை வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ள குறித்த நபர்கள் சுவாசப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தற்போது வேகமாகப் பரவி வரும் நிலையில் பொது சுகாதர பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதாரத் தரப்பினர் பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், கொரோனா தொற்றின் மூன்றாம் அலைக்கு மத்தியில் சுகாதாரப் பணியாளர்கள் பாதுகாக்கப்படுவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.     


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top