புனித ரமழான் (நோன்பு) பெருநாள் தொழுகைகள் இன்று வெள்ளிக்கிழமை (14) நாட்டின் பல பாகங்களிலும் உள்ள முஸ்லீம்களால் வீட்டில் இருந்தவாறே மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக வருகின்ற திங்கட்கிழமை வரை அரசாங்கத்தினால் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் இன்றைய தினம் வீடுகளில் இருந்தவாறு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பெருநாள் தொழுகையில் ஈடுபட்டதுடம் பெருநாள் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் தேவையற்ற ஒன்று கூடல்களை தவிர்த்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வீடுகளில் இருந்தவாறே நோன்பு பெருநாள் நிகழ்வுகளை முன்னெடுக்குமாறும் கொரோனா விரைவில் இந்த முழு உலகத்தை விட்டு விலக எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திக்குமாறும் மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசல் மெளலவி எஸ்.எ.அசீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top