ஹொரணை பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் கடமையாற்றும் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் என 300 பேருக்கு இன்று கோ விட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

ஹொரணை நகர சபை மண்டபத்தில் இவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.சீனாவில் தயாரிக்கப்பட்ட சைனோபார்ம் தடுப்பூசி இவர்களுக்கு வழங்க்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோ விட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பிரதேசவாசிகள் நகர மண்டபத்திற்கு சென்றுள்ளனர்.

இன்று பேருந்து ஊழியர்களுக்கு மாத்திரமே தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top