15 வயது சிறுமி ஒருவரை இணையத்தின் ஊடாக விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்த இணைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அதனடிப்படையில் குறித்த இணைதளத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.பாணந்துறை, நல்லூருவ பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த இணையதளத்தின் கணக்காளராக கடமையாற்றிய பிலியந்தல, அளுபொலந்த பகுதியை சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இருவரை இன்று (04) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இவர்களுள் பெண்கள் இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 16 பேரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top